விஜய் வைத்த கோரிக்கையால் தளபதி 66 படத்தில் படக்குழு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

Vijay Requests to Thalapathy 66 Team : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 66 படத்தில் நடந்த மாற்றம்.. விஜய் வைத்த கோரிக்கை எல்லாத்துக்கும் காரணம்.!!

தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க முடிந்துள்ள நிலையில் தளபதி விஜய் படக்குழு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதாவது பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இப்படத்தின் படப்பிடிப்புகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்க அவரது கோரிக்கையை படக்குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் தளபதி 66 இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையிலும் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

தளபதி 66 படத்தில் நடந்த மாற்றம்.. விஜய் வைத்த கோரிக்கை எல்லாத்துக்கும் காரணம்.!!

100 சதவீத படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டிருந்த படக்குழு விஜய் கோரிக்கையால் அதில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.