KPY Dheena
KPY தீனா விருது விழா ஒன்றில் மாஸ்டர் படத்தின் அப்டேட் கொடுத்து விஜய் பற்றி பேசியுள்ளார்.

Vijay Request to KPY Deena : தமிழ் சின்னத்திரையில் காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் தீனா. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்க தொடங்கி விட்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்து வருகிறார். தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட தீனா மாஸ்டர் படத்தில் விஜய் தன்னை பார்த்ததும் அது நீ தானா என கேட்டார்.

நானும் கைதில காமாட்சியா நடித்திருந்தது நான் தான் என கூற அது இல்ல டிவி ல பிராங்க் கால் பண்ணி கலாய்க்கறது நீ தானா என கேட்டார்.

ஆமாம் என சொன்னதும் என் ப்ரண்ட்ஸ்களுக்கும் போன் பண்ணி கலாய்க்கணும் என கேட்டு கொண்டார் என பேசியுள்ளார்.

மேலும் மாஸ்டர் படத்தில் விஜயுடன் சேர்ந்து வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன், இன்னும் நிறைய சுவாரஷ்யமான விசியம் எல்லாம் இருக்கு, அதெல்லாம் பட ரிலீசுக்கு அப்புறம் சொல்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.