Vijay Rejects Agathiyan Movie

தேசிய விருது வழங்கிய அஜித் பட இயக்குனர் படத்தை நிராகரித்துள்ளார் தளபதி விஜய். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Vijay Rejects Agathiyan Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் காதல் கோட்டை. இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் வெளியாகி இருந்த இத்திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதையும் தட்டிச் சென்றது.

இந்த படத்தினால் அகத்தியன் படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர். அந்த அளவிற்கு காதல் கோட்டை திரைப்படத்தை வித்தியாசமான காதல் படமாக இயக்கி இருந்தார். இதனை அடுத்து விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் தளபதி விஜய் அகத்தியன் இயக்கத்தில் நடிக்க சங்கடப்பட்டார். காரணம் விஜய்க்கு அப்போது காதல் பாடல்களின் மீது பெரிய அளவிற்கு நம்பிக்கை இல்லை. கமர்ஷியல் படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். இதனை விஜயே அகத்தியர் உறவினரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் மட்டும் அகத்தியன் இயக்கத்தில் நடித்து இருந்தால் நிச்சயம் அந்தப் படத்திற்கும் தேசிய விருது கிடைத்து இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.