Vijay Reject Padayappa Opportunity
Vijay Reject Padayappa Opportunity

ரஜினியுடன் சேர்ந்து சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நைசாக நழுவ விட்டுள்ளார் விஜய்.

Vijay Reject Padayappa Opportunity : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்து அதன் பின்னர் ஹீரோவான இவர் இன்று மிகப் பெரிய நடிகராக வலம் வருகிறார்.

இவர் ஒரு வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படையப்பா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

விஷால் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் சிம்பு – நடந்தது என்ன தெரியுமா?

ஆம் இப்படத்தில் அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க கேஎஸ் ரவிக்குமார் முதலில் விஜய்யை தான் அணுகியுள்ளார்.

அப்போது விஜய் சோலோ ஹீரோவாக கலக்க தொடங்கி விட்ட காலமென்பதால் இப்படத்தை நிராகரித்துள்ளார்.

இந்த சிறு வாய்ப்பை விஜய் நிராகரித்தது குறித்து விஜய் ரசிகர்களும் சரியான முடிவு தான் என கூறி வருகின்றனர்.