Vijay Reject Lingu Samy Movie
என்னால அப்படியெல்லாம் நடிக்க முடியாது என பிரபல இயக்குனரின் கதையை நிராகரித்துள்ளார் விஜய்.

தமிழ் சினிமாவின் தளபதியாக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனரான லிங்கு சாமி பேட்டி ஒன்றில் விஜயை பற்றி பேசியுள்ளார்.

விஜய்க்காக கதையை யோசித்து வருகிறேன். நல்ல கதை அமைந்தால் நிச்சயம் விஜயிடம் சென்று விடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் ஒரு முறை கதை ஒன்றை கூறினேன், அந்த கதையில் சில காட்சிகளில் பாகப்பிரிவினை படத்தில் சிவாஜி கணேசன் நடித்தது போல கையை வைத்து கொள்ள வேண்டும் என கூறினேன்.

ஆனால் விஜய் அப்படியெல்லாம் நடிக்க முடியாது என கூறி அந்த கதையை நிராகரித்து விட்டாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.