Thalapathy Vijay

Vijay Records : தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு கிடைத்துள்ள பெருமையை சீன பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மெர்சல்.

உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்த இந்த திரைப்படம் சீனாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சீனாவில் வெகு விரைவில் நடைபெற இருக்கும் ஹைனன் இஸ்லேண்ட் இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஷ்டிவலுக்கு (Hainan International Film Festival) விழாவிற்கு மெர்சல் தேர்வாகியுள்ளது.

மெர்சலுடன் மாரி செல்வராஜ் இயக்க கதிர் நடித்திருந்த பரியேறும் பெருமாள் திரைப்படமும் தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சீன பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் இந்த விருதிற்கு தேர்வாகியுள்ள படங்களை கொண்டு அல்டிமேட் ட்ரைலர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவை நீங்களும் பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.