Vijay Political : தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்? இல்லையேல் தனித்து நிற்க வேண்டுமா? என்று கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
தளபதி விஜயும் அரசியலுக்கு வருவதற்கான வேளைகளில் இறங்கி விட்டார். விஜயின் அரசியல் பயணத்திற்காகவே எடுக்கப்பட்ட படம் போல் சர்கார் படமும் அமைந்திருந்தது.
இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வந்தால் ரஜினி, கமல் இவர்களுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்? இல்லையேல் தனித்து நிற்க வேண்டுமா என நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது கிடைத்துள்ளன.
ட்விட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 68 % பேர் அவர் தனித்தே நிற்கலாம் என ஓட்டளித்துள்ளனர்.
மேலும் 20 % பேர் கூட்டணி அமைத்தால் கமலுடன் இணையலாம் எனவும் வெறும் 12 % பேர் ரஜினியுடன் இணைய வேண்டும் எனவும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.
அதே போல் யூ ட்யூபில் நடத்தப்பட்ட கணிப்பில் 85% பேர் தனித்து நிற்கலாம் எனவும் 9% பேர் கமலுடன் கூட்டணி வைக்கலாம் எனவும் 6% பேர் ரஜினியுடன் கூட்டணி வைக்கலாம் எனவும் ஓட்டளித்துள்ளனர்.
#விஜய் அரசியலுக்கு வந்தால் யாருடன் கூட்டணி வைக்கலாம்?#கமல் #ரஜினி @actorvijay @ikamalhaasan @rajinikanth #rajini #KamalHaasan #vijay
— Kalakkal Cinema (@kalakkalcinema) November 16, 2018