Vijay Political Entry in 2021 Election
Vijay Political Entry in 2021 Election

2021 சட்டசபைத் தேர்தலில் தளபதி விஜய் போட்டியிட இருப்பதாகவும் அதற்காக அவரை தந்தை எஸ்ஏசி ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay Political Entry in 2021 Election : தமிழக அரசியலில் முக்கியமான அரசியல் தலைவர்களாக வலம் வந்தவர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி. இவர்கள் இருவரின் மரணத்திற்கு பிறகு தமிழக அரசியல் பெரிய வெற்றிடம் இருப்பதாகவும் அதனை நிரப்ப ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபட உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து தளபதி விஜய் அரசியலில் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இப்படியான நிலையில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சி மத்திய தேர்தல் ஆணையத்தின் புதிய கட்சியை பதிவு செய்வது குறித்து டெல்லி வழக்கறிஞர் ஒருவரை அழைத்து விஜயில அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் ஒரு ரவுடி.. பணம் கொடுத்து எனக்கு எதிரா பேச வைக்கிறார் – நடிகை வெளியிட்ட சர்ச்சை வீடியோ

இதனால் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் களமிறங்க 2021 ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சரியான நேரம் என பலரும் கருதுகின்றனர்.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை தொடர்ந்து தளபதி விஜய்யும் போட்டியிடலாம் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

எஸ் எஸ் வி ஆலோசனை நடத்திய வழக்கறிஞர் தான் பல திரையுலக பிரபலங்கள் தொடங்கிய புதிய கட்சியை மத்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.