தளபதி விஜய் வீடியோ

தளபதி விஜய் வீடியோ : சமீபத்தில் விஜய் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.

பலரது கவனத்தையும் ஈர்த்த இந்த வீடியோ சமூக வளையதளங்களில் செம ட்ரெண்ட் அடித்தது. இதனால் விஜய் கொஞ்சும் அந்த குழந்தை யார் என்ற கேள்வியும் அதிகமாக எழுந்திருந்தது.

இந்நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. அந்த குழந்தை வேறு யாரும் இல்லை. விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ்வின் உறவினர் குழந்தை தான் என தெரிய வந்துள்ளது.

சஞ்சீவ் விஜயின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருடைய உறவினர்கள் பலர் விஜய் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

அவர்கள் விஜயை பார்க்க சென்றுள்ளனர். அப்போது இந்த குழந்தையும் கூட்டி சென்றுள்ளனர். குழந்தையை பார்த்த விஜய் அதனுடன் தான்னும் ஒரு குழந்தை போல் கொஞ்சி விளையாடியுள்ளார்.

ரசிகர்கள் பலருக்கும் இருந்த சந்தேகம் தற்போது தீர்ந்துள்ளது. சஞ்சீவ் சமீபத்தில் சர்கார் டீசரை பார்த்து விட்டு விஜயை பாராட்டி பேசி இருந்ததும் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.