விஜய் சொன்ன பிளான் லோகேஷ் கனகராஜ் ஏற்றுக்கொண்டு தன்னுடைய திட்டத்தை மாற்றியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படம் வாரிசு.

இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இரண்டு மாதம் காஷ்மீரில் நடைபெற்றது தொடர்ந்து கடந்த வாரம் அந்த படப்பிடிப்பை முடித்து படக்குழு சென்னை திரும்பியது.

வரும் நாட்களில் சென்னையில் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது. பிறகு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடத்த லோகேஷ் திட்டமிட்டுள்ளார். ஆனால் தளபதி விஜய் காஸ்மீரில் படக்குழுவு அதிக கஷ்டப்பட்டதால் இனி அவுட்டோர் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இனிவரும் அனைத்து சூட்டிங் சென்னையிலேயே நடத்தலாம் என சொல்ல லோகேஷ் கனகராஜூம் அதற்கு ஓகே சொல்லியுள்ளார். ஆமாம், இனி வரும் நாட்களில் இவிபி ஃபிலிம் சிட்டி, பிரசாத் லேப் மற்றும் விஜயின் வீட்டு உள்ளிட்ட இடங்களில் தான் லியோ சூட்டிங் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது.