Vijay

Vijay Photo : நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கவுள்ளது.

இந்த இடைவெளியில் தனது குடும்பத்துடன் சீனா சென்றிருக்கும் விஜய், கிட்டத்தட்ட ஒருவாரம் வரை அங்கு தங்கியிருந்து அதன்பின் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

விஜய் கையசைத்தால் கூட செய்தியாகி விடுவதால் அவர் சென்னையில் வெளியே தலைக்காட்டுவதே சமீப காலமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் சீனா சென்றிருக்கும் விஜய், அங்கு சகஜமாக தனது குடும்பத்தாருடன் வெளியில் உலா வருகிறார்.

இதில் தனது மகன் சஞ்சய்யுடன் சீனா வீதியில் விஜய் நடந்து வரும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.