Vijay

Vijay Phone Call : காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ளவருக்கு தளபதி விஜய் போன் செய்து வாழ்த்து கூறியுள்ளார். இதனை பற்றி அந்த ராணுவ வீரர் நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

விஜயின் தீவிர ரசிகர் தமிழ் செல்வன். தேனீ மாவட்டத்தை சேர்ந்த இவர் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார்.

காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் தமிழ்செல்வன் பாதுகாப்பிற்காக அங்கு சென்றுள்ளார். இதனை தன் குடும்பத்தாரிடம் கூட தெரியப்படுத்தாமல் தேனி மாவட்ட விஜய் மக்கள் மன்ற தலைவருக்கு மட்டும் தெரிய படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் மறுநாள் விஜய் தமிழ்செல்வனுக்கு போன் செய்து தைரியமாக சென்று வெற்றியுடன் திரும்புங்கள். உங்களுக்கு எதுவும் ஆகாது.

நீங்கள் திரும்பி வந்தவுடன் நான் உங்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார். விஜய் தன்னுடன் பேசியதை பற்றி ராணுவ வீரர் தமிழ் செல்வன் வீடியோ ஒன்றில் மூலமாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.