Vijay Next With Ajay Gnanamuthu

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

Vijay Next With Ajay Gnanamuthu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தொடர்ந்து அனுபவமிக்க இயக்குனர்களுடன் பணியாற்றி வந்த விஜய் தற்போது இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தொடங்கி உள்ளார்.

அட்லிக்கு தொடர்ந்து மூன்று படங்களை கொடுத்த விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் இளம் இயக்குனருடன் தான் பணியாற்ற உள்ளார் தளபதி விஜய். விஜய்யின் அடுத்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கலாம் என கூறப்படுகிறது. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என மிரட்டலான படங்களை கொடுத்தவர் அஜய் ஞானமுத்து.

இவர் துப்பாக்கி படத்தில் முருகதாஸின் உதவி இயக்குனராக கூட பணியாற்றியுள்ளார். இதனால் இவர்களது கூட்டணியில் வெகுவிரைவில் அமையும் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.