விஜய் டிவியின் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நிழச்சி கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்துகொண்டிருக்கிறது இதில் விஜய் டிவியின் மெகாதொடர் நட்சந்திரங்கள் மற்றும் சூப்பர் சிங்கர் , கலக்கப்போவது யாரு போன்ற நேயர்களின் அபிமான நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஆரம்பித்து நாகர்கோயில், விருதாச்சலம், கும்பகோணம், திருப்பூர், ஈரோடு , விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் இதுவரை இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.

விஜய் டிவியின் பிரபல முகங்களான பாக்கியலட்சுமி தொடரின் நாயகி பாக்கியலட்சுமி (சுசித்ரா), பணிவிழும் மலர்வனம் தொடரின் வினுஷா தேவி, வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரின் திரவியம், ஆர்த்தி சுபாஷ், சின்ன மருமகள் தொடரின் தமிழ்செல்வி (ஸ்வேதா), மகாநதி தொடரின் காவேரி (லட்சுமி பிரியா) விஜய், முத்தழகு தொடரின் முத்தழகு (ஷோபனா), பூமிநாதன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின் வெற்றியாளர் ஜான், கலக்கப்போவது யாரு அமுதவாணன், என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

இதில் மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு தங்கள் அபிமான நட்சத்திரங்களை நேரில் சந்தித்து அவர்களின் ஆடல் பாடல் கொண்டாட்டம் நிகழ்ச்சிகளை ரசித்தனர். மேலும் மக்களும் இதில் ஆர்வத்துடன் பல நிகழ்வுகளில் பங்கேற்றனர். குறிப்பாக இளைஞர்கள், குடும்ப தலைவிகள், பெண்கள் , குழந்தைகள் என அவர்களுக்கு ஏற்றவாறு பல சுவையான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் கூட்டத்தில் இருந்து இவர்கள் மேடையேறி தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு நேயர்களாகிய மக்களுக்கும் வழங்கப்பட்டு குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற நேயர்களுக்கு பரிகள் வழங்கி அவர்களை கௌரவித்தது விஜய் டிவியின் நட்சத்திர கொண்டாட்டத்தின் குழு. இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்கள் தென்றல் வந்து என்னை தொடர் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் வினோத் பாபு மற்றும் பொன்னி தொடரின் சபரி மற்றும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் ஏஞ்சலின்.கடந்த வாரம் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நடைபெற்றபோது நிகழ்ச்சின் இடையே மழை பெய்யத்தொடங்கியது அனால் மக்கள் கூட்டம் அதை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை தொடரும்படி கூச்சலிட்டபடி அங்கேயே நின்றுகொண்டிருந்தது நிகழ்ச்சின் பங்குபெற்ற அனைவரும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

நேயர்கள் மழை விடும் வரை தங்களது இருக்கைகளை கையில் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை ரசித்தவண்ணம் இருந்தனர். இதனால் அங்கு ஆரவாரமாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தது. இப்படி ஒரு ரசிகர்களையும் மக்களை மேடையில் இருந்தவர்கள் பார்த்து மகிழ்ந்து அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.