நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்குனராக போவதாக தளபதி விஜய் கூறியதாக பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Vijay Milton About Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். என்னதான் சினிமா பின்புலத்துடன் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடுமையான உழைப்பு உள்ளிட்டவைகளால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார்.

இவருடைய ஆரம்பகால படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் இயக்குனர் விஜய் மில்டன். பல்வேறு படங்களில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியதால் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மில்டன் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய் எனக்கு நடிப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லை. 2000 ஆண்டுக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்குனராக போகிறேன் என கூறியதாக சொல்லியுள்ளார்.

ஆனால் விஜய் இன்று அதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உச்ச நடிகராக வளர்ந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.