Vijay Makkal Iyakkam Tweet
Vijay Makkal Iyakkam Tweet

தளபதி விஜயின் பிறந்த நாள் குறித்து விஜய் மக்கள் இயக்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Vijay Makkal Iyakkam Tweet : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தள்ளிப் போயுள்ளது.

இதனையடுத்து படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் அந்தப் படத்தில் நான் நடித்திருக்கணும் மிஸ் பண்ணிட்டேன்.. இயக்குனரிடம் வருத்தப்பட்ட அஜித் – அது என்ன படம் தெரியுமா?

அதுமட்டுமல்லாமல் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி மாஸ்டர் படத்தின் டீஸர் அல்லது டிரைலர் வெளியாகும் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் விஜய்யின் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாட பல திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவாகியுள்ளது.

தற்போதே தொடங்கிய சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. 24 மணி நேரத்தில் ரசிகர்கள் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் விவரம் இதோ!

அந்தப் பதிவில் தளபதி விஜய் தன்னுடைய பிறந்தநாளுக்கு எந்த ஒரு விழாவையும் கொடியேற்றுதல் நிகழ்ச்சியையும் கொண்டாட வேண்டாம் என கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/Dr_Ecr_official/status/1271431496713121793?s=19