நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Vijay Makkal Iyakkam Meeting About Election : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனரின் மகனாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய திறமையாலும் விடாமுயற்சியாலும் இன்று உச்சம் பெற்றுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. விஜய் மக்கள் இயக்கம் அதிரடி அறிவிப்பு

நடிகரை அவதாரத்தை தொடர்ந்து அரசியலிலும் விஜய் வெகுவிரைவில் ஈடுபட உள்ளார். இதற்கு ஆரம்ப புள்ளியாக நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு நிமிடங்களுக்கு மேலாக கைப்பற்றியிருந்தனர்.

நிறைய பேரு என்ன கேலி பண்னாங்க – மேடையில் உருக்கமாக பேசிய Ashwin! | Cook with Comali | HD

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. விஜய் மக்கள் இயக்கம் அதிரடி அறிவிப்பு
தங்கம் வென்ற முன்னாள் கேப்டன் ‘ஜாம்பவான்’ சரண்ஜித் சிங் மரணம் : தலைவர்கள் இரங்கல்

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட உள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடைபெறும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புரூஸ்லி ஆனந்த் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட்டு அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.