மீண்டும் அரசியலில் தளபதி விஜயின் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Vijay Makkal Iyakkam Decision on Mayor Election : தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் பரபரப்பாக இறங்கியுள்ளது. விரைவில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மீண்டும் அரசியலில் களம் இறங்கும் விஜய் மக்கள் இயக்கம்.. வெளியானது பரபரப்பு தகவல்

அனைத்து கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இப்படியான நிலையில் தற்போது இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush & Aishwarya Divorce💔 – உருக்கமாக பேசிய Vijay-யின் தந்தை SAC! | HD

மீண்டும் அரசியலில் களம் இறங்கும் விஜய் மக்கள் இயக்கம்.. வெளியானது பரபரப்பு தகவல்
வடபழனி முருகன் கோவில் : 23-ந்தேதி கும்பாபிஷேகம்

ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கியது. இதில் மொத்தம் 129 பேர் வெற்றி பெற்றனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களம் காண இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் தேர்தலில் களமிறங்கி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க??