தளபதி விஜயை அறிஞர் அண்ணாவாக சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vijay Look As Anna : தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களையும் திட்டங்களையும் கொண்டு வந்தவர் அறிஞர் அண்ணா. அவருடைய பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அறிஞர் அண்ணாவாக மாறிய விஜய்.. பரபரப்பைக் கிளப்பிய போஸ்டர் - வைரலாகும் புகைப்படம்.!!

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள் அவரை அறிஞர் அண்ணா அவர்கள் சித்தரித்து மீண்டும் வேண்டும் அண்ணா என்ற பெயரில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேசமயம் இந்த போஸ்டர் புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.