
Keerthi Suresh : நடிகை கீர்த்தி சுரேஷுடன் தளபதி விஜய் எடுத்து கொண்டுள்ள செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, பழ கருப்பையா, யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.
முருகதாஸ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வரும் தீபாவளி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷுடன் சேர்ந்து எடுத்து கொண்ட செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை தளபதி ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
சர்கார் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்க இருப்பது ரசிகர்கள் அனைவரும் டிக்கெட் புக்கிங்கிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதோ விஜய் கீர்த்தி சுரேஷின் செல்ஃபி புகைப்படம்