தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர் சூர்யா. ஆரம்ப காலங்களில் மல்டி ஸ்டார் படங்களில் நடித்த சூர்யா மீண்டும் தற்போது பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 படத்தில் ஆர்யா, மோகன் லாலுடன் இணைந்து நடித்து வருகிறார்.

விஜயுடன் இணையும் சூர்யா - ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா விருந்து.!

இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகரான தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் இருவரும் இணைந்தால் அது நிச்சயம் மிக பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.