Vijay in Vanitha Son Birthday
Vijay in Vanitha Son Birthday

தன்னுடைய மகனுடன் தளபதி விஜய் இருக்கும் புகைப்படங்களை வனிதா வெளியிட்டுள்ளார்.

Vijay in Vanitha Son Birthday : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இறுதியில் படக்குழு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இருப்பினும் விஜய் பிறந்த நாளில் அவரைப் பற்றிய பழைய நினைவுகள், பழைய புகைப்படங்கள் போன்றவை வெளியாகி ரசிகர்களை ஓரளவிற்கு திருப்திப்படுத்தின.

அடேய் என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க.. ஆணாக மாறிய நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா மற்றும் திரிஷா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அந்த வகையில் வனிதா விஜயகுமார் தன்னுடைய மகன் விஜய் ஸ்ரீ ஹரியின் முதல் பிறந்த நாளில் தளபதி விஜய் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது வனிதாவின் மகனை தன் மடிமீது வைத்துக் கொஞ்சுகிறார். அந்தப் புகைப்படங்களை வனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தளபதி விஜய் ஹீரோவாக அறிமுகமான சந்திரலேகா திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Vijaysrihari first birthday with #thalapathy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on