Vijay in Political Poster in Madurai
Vijay in Political Poster in Madurai

தளபதி விஜய் மற்றும் சங்கீதாவை எம்ஜிஆர், ஜெயலலிதா போல சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay in Political Poster in Madurai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

சமீபமாக அவரது நடிப்பில் வெளியாகும் படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார். இதன் காரணமாக தளபதி விஜய் வெகு விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என கூறப்பட்டு வருகிறது.

பெரும்பாலான விஜய் ரசிகர்களும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் வரவேண்டும் என ஆசைப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என மதுரை மாவட்ட ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனை வெளிக்காட்டும் விதமாக மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் அடிக்கடி விஜய் குறித்து அரசியல் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

மாஸ்டர் தியேட்டர் ரிலீஸ் இல்லை.. மாஸ்டர் பட நடிகர் பெயரில் பதிவான பதிவு – உண்மையான நிலவரம் என்ன தெரியுமா?

தற்போதும் அப்படித்தான் தெற்கு மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் தளபதி விஜய்யை எம்ஜிஆர் ஆகவும் விஜய்யின் மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மேலும் இந்த போஸ்டரில் புரட்சித்தலைவரே மற்றும் புரட்சித்தலைவியே எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.