Vijay in Karudan Movie Poster :
Vijay in Karudan Movie Poster

வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு கருடன் என பெயரிட்டு இருப்பது போல போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

Vijay in Karudan Movie Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.

தளபதி 65 படத்திற்கு பிறகு விஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ரசிகர்களும் இந்த கூட்டணிக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வெறித்தனத்தின் வெளிப்பாடாக தற்போது கருடன் என்ற பெயரில் டைட்டில் லுக் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

இந்த டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தானே தவிர அதிகாரப்பூர்வமான போஸ்டர் அல்ல. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் சமூக வைரலாகி வருகிறது.

https://twitter.com/Arunkum66245992/status/1302217941962817537?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.