Vijay in Ilayaraja 75
Vijay in Ilayaraja 75

Vijay in Ilayaraja 75 – இசைஞானி இளையராஜா அவர்களின் 75-வது பிறந்தநாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அண்மையில் பிரமாண்டமான முறையில் கொண்டாடியது.

இதில் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர். மோகன்பாபு, பால்கி என பிற மொழிகளில் இருந்து கூட பிரபலங்கள் பங்கேற்றனர்.

ஆனால் இதில் விஜய் பங்கேற்காதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அஜித் எந்த விழாவுக்கும் வரமாட்டார்.

ஆனால் பல விழாக்களில் பங்கேற்கும் விஜய் இந்த விழாவை ஏன் புறக்கணித்தார் என்பது பலரது கேள்வியாக இருந்தது.

இதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. ஒருமுறை பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை வைத்துக்கொண்டே விஜய்யை இழிவாக பேசினார்.

“மலர்ந்து மலராத” போன்ற பாடலை தற்போது விஜய்aக்கு போட முடியுமா என்று அவர் பேசியது எஸ்.ஏ.சி-யை சங்கடத்தில் ஆழ்த்தியது.

அதனால்தான் விஜய் தரப்பு இளையராஜா விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

அதேசமயம் இளையராஜாவின் இசைக்கு விஜய் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here