Vijay in Green India Tweet Record

சவாலை நிறைவேற்றி இதை பதிவிட்ட பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Vijay in Green India Tweet Record : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் இந்தப் படம் வெளியாக உள்ளது.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யும் விஜய் சேதுபதியும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்காக மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜயின் பதிவு படைத்துள்ள சாதனை ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தெலுங்கு சூப்பர் ஸ்டார் தளபதி விஜய்க்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற பெயரில் சவால் ஒன்றை எடுத்திருந்தார்.

அதன்படி விஜயும் தன் வீட்டில் மரக்கன்று நட்டு அந்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த பதிவு ட்விட்டர் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு நடிகரின் பதிவு அதிக லைக்குகளை பெற்று இருப்பது இதுதான் முதல் முறை என பலரும் கொண்டாடி வருகின்றனர் .