Vijay in Corona Awareness
Vijay in Corona Awareness

கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தில் தளபதி விஜய் புகைப்படம் இடம் பெற்றிருக்கும் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay in Corona Awareness : கொரானா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள தனிமைப்படுத்திக் கொள்வதும், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவுவதும் மட்டுமே சிறந்த வழி என அரசாங்கம் கூறி வருகின்றது.

கைய ரெண்டையும் Wash பண்ணு.. கொரானா குறித்து டைகர் தங்கதுரை சொன்ன பஞ்ச், அசிங்கமாக திட்டிய ரியோ – இதோ இந்த கூத்த நீங்களே பாருங்க

மேலும் இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

தற்போது கேரளாவில் இது போன்ற ஒரு விழிப்புணர்வு போஸ்டரில் தளபதி விஜய்யின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டரை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. மார்ச் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப் போய் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.