ஓட்டு போட தளபதி விஜய் வந்த காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என தகவல் வெளியான நிலையில் தற்போது அது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Vijay in Car Insurance Certificate : தமிழகத்தில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நகராட்சி மாநகராட்சி உள்ளிட்ட இடங்களில் வார்டு கவுன்சிலர்களுக்கான இந்த தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

தளபதி விஜய் காரில் வந்து தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். மேலும் தன்னால் ஏற்பட்ட இடையூறுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இதனையடுத்து தளபதிவிஜய் வந்த காருக்கு 2020-ல் இன்ஷூரன்ஸ் காலாவதியாகிவிட்டது. இன்ஷூரன்ஸ் இல்லாமல் அவர் வாகனத்தை ஓட்டி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இந்தநிலையில் காருக்கு சரியான இன்ஷூரன்ஸ் இருப்பதாகவும் அது இந்த வருடம் மே மாதம் தான் நிறைவு பெறுவதாகவும் ஆதாரத்தோடு விளக்கம் அளித்துள்ளனர் விஜய் தரப்பினர். இவர்கள் வெளியிட்டுள்ள ஆதாரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.