Vijay Helps to 11 Womens
Vijay Helps to 11 Womens

ஒரே போன் காலில் தளபதி விஜய் பதினொரு இளம் பெண்களை காப்பாற்றியுள்ளார்.

Vijay Helps to 11 Womens : சென்னையைச் சேர்ந்த தேவிகா என்ற பெண் தனது குடும்பத்தார் 11 பேருடன் தூத்துக்குடியில் நடந்த திருமணம் ஒன்றிற்காக சென்றுள்ளார்.

இவர்கள் தூத்துக்குடி சென்றதன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொருளால் அங்கிருந்து ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து உள்ளனர்.

இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் தேவிகாவை தவிர மற்ற அனைவருமே 20 வயதிற்குள்ளானவர்கள் தான்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் பேருந்து நிலையத்திலும் கோவில்களிலும் தங்கி தங்களது நாட்களைக் கழித்துக் கொண்டு கொண்டுள்ளனர். கையில் இருந்த பணமும் தீர்ந்து போய்விட்டது.

கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான் ஆனால் அஜித்?? – ரசிகரின் கேள்விக்கு பூனம் பாஜ்வா கொடுத்த பதில் – வைரலாகும் பதிவு.!

இதனையடுத்து தேவிகா தான் இவ்வாறு தவித்து வருவதை அங்கிருந்த விஜய் ரசிகர் மன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து அவர்கள் இதனை அகில இந்திய ரசிகர் மன்ற தலைவர் புசி ஆனந்தனுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தளபதி விஜய்க்கு தெரியப்படுத்த உடனே விஜய் இவர்களை சென்னைக்கு கொண்டு வரும் வேலையை கவனிக்குமாறு கூறினார்.

அதன் பின்னர் விஜய் ரசிகர் மன்றம் உரிய அனுமதியுடன் இவர்களை பாதுகாப்பாக சென்னை கொண்டு வந்து சேர்த்துள்ளது.