Vijay
கணவனை இழந்த தன்னுடைய ரசிகரின் மனைவிக்கு விஜய் செய்த உதவி சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay Help : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தன்னுடைய ரசிகர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிப்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு, அனிதாவின் தற்கொலை போன்ற சம்பவங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் என்ற ஊரில் செயல்பட்டு வரும் தன்னுடைய ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

இதனையறிந்த விஜய் இறந்தவரின் மனைவி மற்றும் அவரின் இரு மகன்களுக்காக ரூ 50,000 கொடுத்து உதவியுள்ளார்.