Vijay Hazare Trophy TamilNadu Vs Punjab
தமிழகம்-பஞ்சாப் இடையிலான ஆட்டம் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற்று உள்ளது.

Vijay Hazare Trophy TamilNadu Vs Punjab : விஜய் ஹசரே கோப்பை காலிறுதி ஆட்டங்கள் ஆலுரில் நேற்று  நடைபெற்றன.

தமிழகம்-பஞ்சாப் இடையிலான ஆட்டம் நடைபெற்ற போது, மழை குறுக்கிட்டதால் 50 ஓவர்களில் இருந்து 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் ஆடிய தமிழகம் 39 ஓவர்களில் 174/6 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர்கள் முரளி விஜய் 22, அபிநவ் முகந்த் 17 ஆகியோர் சோபிக்கவில்லை.

பின்னர் வந்த பாபா அபராஜித் நிதானமாக ஆடி 76 பந்துகளில் 56 ரன்களை சேர்த்தார்.

ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் 13 ரன்களுக்கும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 11 ரன்களுக்கும் அவுட்டான நிலையில் மீண்டும் சிக்கலுக்கு தள்ளப்பட்டது தமிழகம்.

பின்னர் வந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 35 பந்துகளில் 39 ரன்களை சேர்த்ததால் கெளரவமான ஸ்கோரை எட்டியது.

175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்திருந்தது.

லீக் சுற்றுகளில் தமிழகம் 9 வெற்றிகளும், பஞ்சாப் 5 வெற்றிகளையும் பெற்றிருந்தன.

இதன் அடிப்படையில் தமிழகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. குஜராத் அணியுடன் புதன்கிழமை அரையிறுதியில் மோதுகிறது தமிழகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here