mumbai-vs-delh
பெங்களூருவில் நடந்த விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை அணி மற்றும் டெல்லி அணி மோதியது. இப்போட்டி 50 ஓவர் கொண்ட தொடராகும்.
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி குறைந்த ரன்கள் எடுத்து தோல்வியை கண்டது.
கம்பிர் 1 ரன் எடுத்து அவுட் ஆனார். இது டெல்லி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
மொத்தமாக டெல்லி அணி 45.4 ஓவர் முடிவில் எல்லா விக்கெட்களும் இழந்து 177 ரன் மட்டுமே எடுத்தது.
எளிதான இலக்கு என்றாலும் டெல்லி அணி மும்பை அணியை எளிதில் வெற்றி பெற விடவில்லை. டெல்லி அணியின் பந்து வீச்சாளர் நவதீப் நன்றாக பந்துகளை வீசி ரன் எடுப்பதை தடுத்தார். இந்நிலையில் மும்பை அணி 40-4 என்ற நிலையில் இருந்தது.
இறுதியில் மும்பை அணி 6 விக்கெட் இழந்து 180 ரன் எடுத்து வெற்றி பெற்றது .
இவ்வெற்றியின் மூலம் மூன்றாவது முறையும் வெற்றி பெற்ற அணியாக மும்பை அணி சிறப்படைந்தது .
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.