ஜப்பானில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாபெரும் நட்சத்திரபட்டாளங்கள் இணைந்து நடித்தது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கும் தளபதி விஜய் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அதாவது ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா திரைப்பட விருது நிகழ்ச்சி விழாவில் 2021 ஒன்னாம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு மூன்று பிரிவுகளில் விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விஜய் பெற்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து சிறந்த வில்லனுக்கான விருதை விஜய் சேதுபதியும், சிறந்த கோரியோகிராபர் கான விருதை தினேஷ் குமாரும் பெற்றிருக்கின் றனர். இதனை ரசிகர்கள் கொண்டாடி டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.