Vijay Funny Moments With Andrea
Vijay Funny Moments With Andrea

ஆண்ட்ரியாவின் வார்த்தையை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜய் நீ தமிழ்நாட்டு தான் இருக்கியா என கேட்டு அவரை கலாய்த்து உள்ளார்.

Vijay Funny Moments With Andrea : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும்போது ஆண்ட்ரியா விஜய்யின் தீவிர ரசிகை ஆகி விட்டேன் என கூறியிருந்தார். ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் திகில் படத்தில் பாடியது பற்றி பேசியபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை.

குஷ்புவை திட்டிய ரசிகர்.. விஜய் போல பெண்களை மதிக்கக் கற்றுக்கோங்க – பிரபல இயக்குனர் அதிரடி பதிவு!

காரணம் நான் அப்போது பிகில் படத்தை பார்க்கவில்லை அதன் பின்னர் கூகுள் பண்ணிப் பார்த்து விட்டு மறுநாள் நல்லா பாடி இருக்கீங்க எனக் கூறினேன்.

அவர் அதிர்ச்சியுடன் எந்த பாட்டு என கேட்டார். வெறித்தனம் பாடல் என கூறினேன். அந்த பாட்ட இப்போதான் கேட்கறீங்களா என கேட்டு விட்டு நீ தமிழ்நாட்டுல தான் இருக்கியா என கலாய்த்தார்.

மேலும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாட்டு பாடினோம் அதுவாச்சும் ஞாபகம் இருக்கா என கேட்டார் என ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவர்கள் இருவரை துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் என்ற பாடலை பாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.