Vijay Fans Controversy

Vijay Fans Controversy : சர்கார் படத்திற்கும் அதிமுக கட்சிக்கும் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படம் அதிமுக கட்சியை விமர்சிக்கும் வகையில் அமைந்ததால் படத்தை மோசமாக விமர்சனம் செய்து வந்தனர்.

பல்வேறு இடங்களில் பேனர்கள், போஸ்டர்களை கிழித்தும் திரையரங்குகள் முன்பும் போராட்டங்களில் ஈடு வந்தனர். இதனையடுத்து படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கி திரையிடப்பட்டன.

இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் சிலர் அதிமுக கட்சியின் கொடியை எரித்து விஜயை பகைத்து கொண்டால் இதான் உங்களுக்கு நிலைமை என அக்கட்சியை எச்சரித்துள்ளனர்.

அதிமுக கட்சியின் கொடியை எரித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here