vijay-it-raid
விஜய் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை நடந்து வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் அவர்களின் பலத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

Strong Support to Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில், ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படத்தால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான AGS என்டர்டைன்மெண்ட், விஜயின் வீடு, விஜயின் பைனான்சியர் அன்பு செழியன் வீடு என கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 2 நாட்களாக இந்த சோதனையும் விசாரணையும் நடந்து வருகிறது, பைனான்சியர் வீட்டில் ரூ 65 கோடி, AGS நிறுவனத்தில் ரூ 25 கோடி மற்றும் தங்கம் சிக்கி இருப்பது விஜய்க்கு மேலும் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் எங்க அண்ணன் விஜய்க்கு ஆதரவாக நாங்க இருக்கோம் என கூறி சமூக வளையதளங்களில் #WeStandWithTHALAPATHY #WeStandWithVIJAYanna ##WeStandWithVIJAY என பல ஹேஸ்டேக் உருவாக்கி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here