டாக்டர் படத்தால் டீஸ்ட் இத்திரைப்படம் எதிர்பார்த்ததை விட சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

Vijay Fans Review on Beast Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

டாக்டர் படத்தால் வந்த நம்பிக்கை.. பீஸ்ட் சூப்பர் டூப்பர் ஹிட் கன்ஃபார்ம் - ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்.!!

இந்த நிலையில் இன்று நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கி வருவதன் காரணமாக விஜய் ரசிகர்களுக்கும் டாக்டர் படத்தின் விமர்சனம் எப்படி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டு இருந்தது. மேலும் விஜய் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

Flop ஆக Chance-ஏ இல்ல.., படம் தாறுமாறா இருக்கு..! | Doctor Public Review | Sivakarthikeyan | TamilHD

படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதாக கூறி வருகின்றனர். மேலும் படம் சூப்பராக இருப்பதாகவும் பீஸ்ட் திரைப்படம் வேற மாதிரி இருக்கும் என நம்பிக்கை வந்துள்ளதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்காக உயர்ந்துள்ளது.