Vijay Fans Request on Thalapathy 65

தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாக அவர் வேண்டவே வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Vijay Fans Request on Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், ஸ்ரீநாத் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்கவில்லை என தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக இந்தத் திரைப்படத்தை இயக்குனர் பேரரசு அல்லது மகிழ்திருமேனி இயக்கலாம் எனவும் கூறப்பட்டது. மேலும் பேரரசு இயக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் தளபதி ரசிகர்கள் இயக்குனர் பேரரசு வேண்டாம் என கூறி வருகின்றனர். சிவகாசி, திருப்பதி போன்ற திரைப்படங்கள் அப்போது விஜய்க்கு ஹிட் கொடுத்திருக்கலாம்.

ஆனால் விஜய்யின் தற்போதைய ஸ்டைலுக்கு பேரரசு செட்டாக மாட்டார் தயவுசெய்து அவர் வேண்டாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மகிழ்திருமேனி அல்லது வேறு யாராவது இயக்குனர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தளபதி விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.