Vijay Fans Reaction to Lokesh Tweet
Vijay Fans Reaction to Lokesh Tweet

மாஸ்டர் ட்ரெய்லர் அப்டேட் கொடுக்க முடியுமா முடியாதா என லோகேஷை விஜய் ரசிகர்கள் மிரட்டியுள்ளனர்.

Vijay Fans Reaction to Lokesh Tweet : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் இம்மாதம் 9ஆம் தேதி வெளியாகி இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

மாஸ்டரில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்திருப்பது யார் தெரியுமா? – வெளியான செம மாஸ் தகவல்.!

சரி படம்தான் தள்ளிப் போய்விட்டது படத்தின் டிரைலரையாவது வெளியிடுங்கள் என விஜய் ரசிகர்கள் இடைவிடாது கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அட்லியின் அடுத்த படம் பற்றி பதிவு ஒன்றை பதிவிட அதில் விஜய் ரசிகர்கள் அவரை வச்சு விளாசி உள்ளனர்.

நெட்டிசன் ஒருவர் வடிவேலு கையில் கத்தி வைத்திருக்கும் புகைப்படத்தை காட்டி மாஸ்டர் ட்ரைலர் அப்டேட் கொடுக்க முடியுமா முடியாதா என மிரட்டலாக கேட்டுள்ளார்.

இன்னும் பல ரசிகர்கள் பல்வேறு வகைகளில் ட்ரைலர் அப்டேட்டை கேட்டு வருகின்றனர். சிலர் கெஞ்சி கின்றனர். சிலர் மிரட்டுகின்றனர். சிலர் திட்டுகின்றனர்..

இதோ இதை நீங்களே பாருங்க

https://twitter.com/Itz_pokkiri7/status/1250030414602760194?s=19

https://twitter.com/Itz_Ramm/status/1250028289252622338?s=19