Vijay

Vijay Fans Meet : விஜயை பார்க்க சென்ற ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ள சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் படு மும்மராக நடந்து வருகின்றன.

தொடர்ந்து படப்பிடிப்பு தலத்தில் இருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நேற்று விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

விஜயுடன் லிப் லாக்… கேவலமா இல்லயா? நடிகையை விளாசும் நெட்டிசன்கள்.! ( வீடியோ உள்ளே )

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் பகுதிகளில் விஜயை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூடி கொண்டே இருக்கிறது.

நேற்று நள்ளிரவில் நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டுள்ளார். அப்போதும் கூட்டம் கூடியுள்ளது. இதனால் பாதுகாப்பிற்காக அங்கிருந்த போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.