Vijay fans Gesture to Auto Drivers :

நேற்று இவர் தன் ரசிகர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளார்.

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகம் மட்டும்தான் மூன்று முதலமைச்சர்களை சினிமாவில் இருந்து பெற்றிருக்கிறது. சினிமாவுக்கும் அரசியலுக்குமான தொடர்பு இங்கு அவ்வளவு வலிமையானது.

திரையில் நீதிக்காக போராடுபர்கள் அரியணையில் அமர்ந்தாலும் அதையே செய்வார்கள் என்ற பிம்பம் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பரவி இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

புதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்!

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவில் தொடங்கி விஜயகாந்த் வரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு போய் தாக்கம் ஏற்படுத்தியவர்களின் பட்டியல் ஏராளம்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் வருவாரா மாட்டாரா? என எதிர்பார்க்க வைத்த ரஜினியும் ஒருவழியாக வந்துவிட்டார். கமலோ அவருக்கு ஒருபடி மேலே போய், கட்சி கொடியையே அறிமுகம் செய்துவிட்டார்.

இந்த நிலையில் அடுத்து இவரும் வருவார் என ரசிகர்களின் பார்வை தற்போது ஒருவர் மீது திரும்பி இருக்கிறது.. அவர் ‘விஜய்’.

இவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் மக்களுக்கான நலப்பணிகளில் இவர் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டே வருகிறார் அந்த வகையில் நேற்று இவர் தன் ரசிகர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது மேலும் விஜய்யின் இந்த செயல் அவர் மீதான மதிப்பை பன்மடங்கு உயர்த்தி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.