Vijay Fans Contoversy

Vijay Fans Contoversy : விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் ரசிகர்கள் இருவர் மிகவும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த சர்கார் திரைப்படம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் அதிமுக அரசின் இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் போட்டு கொளுத்தினர். இதனால் அதிமுக தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுக்க தொடங்கின.

இதனையடுத்து அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன. மேலும் அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த சர்கார் பட பேனரையும் கிழித்தனர்.

இந்நிலையில் தற்போது இரண்டு நபர்கள் அறுவாள்களுடன் தளபதி ரசிகர்கள் என்ற பெயரில் தமிழக அரசை ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஏதாவது அறிக்கையை வெளியிட்டு இது போன்ற செயல்களை கட்டுப்படுத்தலாம் என்ற கோரிக்கையும் எழுந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.