கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் ஒருவர்.

Vijay Fans Club Member Support to EPS : தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

நாளை மாலை 7 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் ஓட்டு சேகரித்தார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் - நன்றி தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!!

இதனைக் கேட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அந்தக் கூட்டத்திலேயே அதிமுகவிற்கு விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். அவருக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் ஆதரவு முதல்வர் பழனிச்சாமிக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியிடப்பட்ட கருத்து கணிப்புகளில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 130 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.