Vijay Fans Blast Master Team
Vijay Fans Blast Master Team

விஜய்யின் பிறந்தநாளில் மாஸ்டர் பட அப்டேட் எதுவும் வெளியாகாததால் நொந்து போன விஜய் ரசிகர்களுக்கு அப்படத்தின் பிரபலம் ஒருவர் ஆறுதல் கூறியுள்ளார்.

Vijay Fans Blast Master Team : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தளபதி விஜய்.

நேற்று இவர் தன்னுடைய 46 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் விஜய்க்கு வாழ்த்து கூறி வந்தனர்.

மேலும் தளபதி விஜய் ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளில் எப்படியும் மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது டிரெய்லர் வெளியாகும் என உச்ச கட்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனால் இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஏற்கனவே வெளியான போஸ்டர்களை வைத்து புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதை மட்டுமே படக்குழு வெளியிட்டிருந்தது.

இதனால் நொந்து போன விஜய் ரசிகர்கள் இப்படி ஏமாத்திட்டாங்களே என தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா தொற்றா? பரபரப்பை ஏற்படுத்திய தகவல் – விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கம்

இவர்களுக்கெல்லாம் ஆறுதல் கூறும் விதமாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மகேந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் நல்லா கேட்டுக்கோங்க ப்ரோ.. எல்லாரும் அதுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்தும் சரியான பிறகு மாஸ்டர் வரும் சூப்பர் பாஸ்டா என குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் மகேந்திரன் இந்த ஆறுதல் பதிவிற்கு ரசிகர்கள் வெறுப்புடன் அளித்துள்ள கமெண்ட்டுகள் சில.