kadambur

தீபாவளியன்று சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதியில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருப்பது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில், அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாது. அதை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கனவே கூறிவிட்டார்.

மேலும், ‘சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து அதற்கான பணத்தை திருப்பு கொடுக்க வேண்டும்’ என திரையரங்குகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இது சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் எடுத்த விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் விஜய் பேசியதே இதற்கு பின்னணி என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளி நெருங்கும் நிலையில் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். இதையெல்லாம் அரசு கேட்காதா? என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அதில் சிலர் ஆயிரத்திற்கும் அதிகமாக வசூலிக்கப்படும் சென்னை – மதுரை டிக்கெட்டை பகிர்ந்து இதற்கு கடம்பூர் ராஜூ நடவடிக்கை எடுப்பாரா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.