Bigil
விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகின்றது.

விஜய் மற்றும் அட்லீ இணைந்த மூன்றாவது படம் இது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து பிகில் படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்தது.

பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது விஜய் பேசியது பல சர்ச்சைகளை உருவாக்கியது.

இ‌ந்த நிலை‌யி‌ல், தளபதி விஜய் ரசிகர் ஒருவர் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை திட்டி இருந்தார்.

தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் தளபதி ரசிகர் ராஜேஷ் என்பவர்.

அந்த வீடியோவில் தான் அவ்வாறு பேசியது தவறு என்றும் அதற்காக வெட்கப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.