vijay fan
பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் போலீசாரின் தடியடியில் சிக்கிய விஜய் ரசிகர் ஒருவர் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.

Vijay fan angry in bigil audio launch function – பிகில் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்தது.

இந்த விழாவிற்கு முறையாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பல ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அரங்கினுள் நுழைய முயன்றனர்.

ஆடியோ ரிலீஸில் ஆளுங்கட்சியை எச்சரித்த விஜய்… ஆட்டம் கண்ட அதிமுக

எனவே, போலீசார் அவர்களை அடித்து விரட்டினர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. 10 ஆயிரம் பேர் அமரும் விழாவிற்கு ஏஜிஎஸ் நிறுவனம் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றுள்ளதாகவும், விஜயை வைத்து அவர்கள் அரசியல் செய்வதாகவும் விஜய் ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அப்படி போலீசாரிடம் அடி வாங்கிய ஒரு தீவிர விஜய் ரசிகர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது ‘ என் அம்மாவிவின் அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தில் ரூ.1.5 லட்சம் செலவு செய்து விஜய்க்கு கட் அவுட் வைத்தேன்.

ஆனால், போலீசார் என்னை அடித்துவிட்டனர்’ என புலம்பும் வீடியோ வெளியாகியுள்ளது.