bigil
தயாரிப்பாளருக்காக பிகில் திரைப்படம் தோல்வி அடைய வேண்டும் என விஜய் ரசிகர் பேட்டி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Vijay fan angry comment against bigil movie – அட்லி இயக்கம் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19ம் தேதி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்தது. இந்த விழாவிற்கு முறையாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பல ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அரங்கினுள் நுழைய முயன்றனர். எனவே, போலீசார் அவர்களை அடித்து விரட்டினர்.

விஜய்க்கு அடுத்த சிக்கல்… யாரை கேட்டு அனுமதி கொடுத்தீங்க?..விளக்கம் கேட்கும் தமிழக அரசு

இதில் விஜய் ரசிகர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. 10 ஆயிரம் பேர் அமரும் விழாவிற்கு ஏஜிஎஸ் நிறுவனம் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றுள்ளதாகவும், விஜயை வைத்து அவர்கள் அரசியல் செய்வதாகவும் விஜய் ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், போலீசாரிடம் அடி வாங்கிய விஜய் ரசிகர் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய், அட்லி, ஏ.ஆர்.ரகுமானுக்காக பிகில் படம் ஓட வேண்டும். ஆனால், தயாரிப்பாளர் கல்பாத்திக்காக இப்படம் ஃபிளாப் ஆக வேண்டும் என அந்த ரசிகர் கூறுகிறார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இது என்னடா புதுசா இருக்கு’ என கிண்டலடித்து வருகின்றனர்.