Vijay Political

Vijay Political : தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் என்னுடைய முழு ஆதரவும் அவருக்கு தான் என பிரபல வாரிசு நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இளையதளபதியாக இருந்து வந்த விஜய் மெர்சல் படத்திற்கு பிறகு ரசிகர்களால் தளபதியாக அழைக்கப்பட்டார்.

சமீப காலமாக விஜய் அரசியல் பேசும் படமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் ஒரு புறம் தளபதி விஜய் அரசியலுக்கு வர உள்ளார் என்ற பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் சிலரும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் விஜய் அரசியலுக்கு வந்தால் என்னுடைய ஆதரவு அவருக்கு தான் என கூறியுள்ளார்.

விஜயும் விரைவில் அரசியலில் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது, விஜய் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படுமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

View this post on Instagram

 

#thalapathy

A post shared by Sibiraj (@sibi_sathyaraj) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.