Vijay Devarakonda Movie Update
தனது முதல் படமே இவரின் இயக்கத்தில் வேண்டாம் என்று நடிக்க மறுத்த நடிகை

Vijay Devarakonda Movie Update : தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோ விஜய் தேவரகொண்டா.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “டியர் காம்ரேட்” பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓரளவிற்கு மட்டுமே படம் ரசிகர்களிடம் சென்றடைந்தது.

அதனை தொடர்ந்து விஜய் பூரி ஜெகநாத் இயக்கத்தில் “ஃபைட்டர்” என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

ஆனால், விஜய்யின் ரசிகர்கள் இந்த படத்தில், அவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்றும் உங்களுக்கு செட்டாகாது என்றும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ஃபைட்டர் படத்தில் நடிக்க ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை ஒப்பந்தம் செய்ய பட குழு திட்டமிட்டு இருந்தது.

ஆனால், ஜான்வி இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம். இந்த படத்தில் ஹீரோவிற்கு மட்டுமே முக்கியதத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்து நடிப்பதை தவிர்த்து விட்டாராம் ஜான்வி.

இதற்கு முன் ஜான்வி, மகேஷ் பாபு மற்றும் ராம் சரண் ஆகியோருடன் நடிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

janvi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.